14 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்.. பிரபல நடிகர் ஆமீர்கானின் மகள் அதிர்ச்சித் தகவல்

14 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளதாக பிரபல நடிகர் ஆமீர் கானின் மகள் அதிர்ச்சித் தகவல் அளித்துள்ளார்.

மும்பை, நவ-3

பிரபல நடிகர் ஆமீர்கான் 1986-ல் ரீனா தத்தாவைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜூனைத், ஐரா என இரு குழந்தைகள். பிறகு இருவரும் விவாகரத்து செய்துகொண்டார்கள். 2005-ல் கிரண் ராவைத் திருமணம் செய்துகொண்டார் ஆமிர் கான். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. இந்நிலையில் அமீர் கானின் மகளான ஐரா கான், இளம் வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து இன்ஸ்டகிராமில் கூறியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:-

என்னுடைய 14 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். அந்தச் சூழல் வித்தியாசமாக இருந்தது. அந்த நபர் தெரிந்து தான் அதைச் செய்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. அது தினமும் நடக்கவில்லை. என்ன நடந்தது என்று புரிந்துகொள்ளவே எனக்கு ஒரு வருடம் ஆனது. என் பெற்றோர் அந்தச் சூழலில் இருந்து என்னை மீட்டார்கள். அதிலிருந்து வெளியே வந்த பிறகு அதைப் பற்றி நான் மோசமாக உணரவில்லை, அச்சம் கொள்ளவில்லை. அதன்பிறகு அப்படி எதுவும் நடக்கவில்லை. முடிந்துவிட்டது என்று அதிலிருந்து நான் கடந்து வந்துவிட்டேன். யாரிடமும் இதைப் பற்றி பேசவில்லை. என் சிறு வயதில் பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டார்கள். இதனால் நான் அதிர்ச்சிக்கு ஆளாகவில்லை. சுமூகமான முறையில் விவாகரத்து நடைபெற்றது. அவர்களும் இன்னும் நண்பர்களாக உள்ளார்கள். எங்கள் குடும்பம் உடைந்துவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *