இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,310 பேருக்கு கொரோனா..490 பேர் பலி..!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.23 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 82 லட்சத்தை தாண்டியது.

டெல்லி, நவ-3

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட தகவலில் கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 38 ஆயிரத்து 310 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82 லட்சத்து 67 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்து 323 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 76 லட்சத்து 3 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 490 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 97 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் விகிதம் 91.96% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.49% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 6.55% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 10.46 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 11,17,89,350 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *