அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை.. மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

சென்னை, நவ-3

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தரலாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே. சூரப்பா மத்திய மனித வளத்துறைக்கு கடிதம் ஒன்றை தன்னிச்சையாக எழுதி இருந்தார். அதில் பல்வேறு விஷயங்களை அவர் குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தால் 5 ஆண்டுகளில் ரூ.1,500 கோடி நிதி திரட்ட முடியும் என்று அவர் கூறி இருந்ததும் பெரும் சர்ச்சை ஆனது.

இதையடுத்து இந்த விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி அமைச்சர் கே.பி.அன்பழகன், “அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு முடிவு செய்திருப்பதாகவும் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, கூடுதல் கல்விக்கட்டணம் வர வாய்ப்பு நேரிடும்” எனவும் கூறி இருந்தார்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய கல்வி அமைச்சகத்திடம் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணியை கொண்ட தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், ‘துணை வேந்தர் சூரப்பா கூறியது போல அண்ணா பல்கலைக்கழகத்தால் தனியாக நிதி திரட்ட முடியாது. ஏற்கனவே நிதி பற்றாக்குறையில் அண்ணா பல்கலைக்கழகம் இருப்பதாகவும் தமிழக குழு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து தொடர்பாக 2017ல் மத்திய அரசிடம் அளித்த அறிக்கையையும் தமிழக அரசு திரும்பப் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *