தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் 4,5-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை நீலகிரி மாவட்டங்களில் நவம்பர் 4ம் தேதி, 5-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

சென்னை, நவ-2

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 28-ம் முதல் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தகவலில், தமிழகத்தின் மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நவம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *