தனித்தா? அல்லது கூட்டணியா?.. மாவட்ட நிர்வாகிகளுடன் கமல் முக்கிய ஆலோசனை
சென்னை, நவ-2

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். காலை, பிற்பகல், மாலை என மூன்று கட்டமாக 100 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசித்தார். சட்டசபை தொகுதிவாரியாக மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சி குறித்து நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார். தனித்து போட்டியிடுவதா? கூட்டணி அமைக்கலாமா? என ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் பரப்புரைக்கு செல்ல வாகனமும் தயார் நிலையில் வைத்துள்ளார் கமல்ஹாசன். அந்த சிவப்பு நிற பரப்புரை வாகனம் பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
