இந்தியாவில் கொரோனா பாதிப்பு 81 லட்சத்தை தாண்டியது..!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 லட்சத்தைத் தாண்டியது.

டெல்லி, அக்-31

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 48,268 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 81,37,119-ஆக அதிகரித்தது. அதே கால அளவில், நாடு முழுவதும் 59,454 போ் தொற்றில் இருந்து குணமடைந்தனா். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 74,32,829-ஆக அதிகரித்தது. கொரோனா தொற்றுக்கு மேலும் 551 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,21,641-ஆக அதிகரித்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 6 லட்சத்தைவிட குறைந்துள்ளது. நாடு முழுவதும் 5,82,649 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *