புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்று, அவரை வணங்கி மகிழ்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, அக்-31

சர்தார் வல்லபாய் படேலின் 145ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சர்தார் வல்லபாய் படேலில் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சுட்டுரையில், “புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ’இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேல் அவர்தம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தேசத்தின் நலன் காக்க, சிறு சிறு சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து புதிய பாரதத்தை நிர்மாணித்த இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த தினத்தில், அவரது தியாகத்தையும் தேசப்பற்றையும் போற்றி வணங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *