இந்திய கிரிக்கெட் அணி அபாரம்: தெ.ஆப்பிரிக்கா தோல்வி

ராஞ்சி.அக்டோபர்.22

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ராஞ்சி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ், 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.

 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்ற இந்திய அணி 2-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது.

 மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி ரோகித் ஷர்மாவின் இரட்டை சதத்துடன் 497/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய தென் ஆப்ரிக்கா 162 ரன்கள் எடுத்து. ‘பாலோ ஆன்’ பெற்றது. தொடர்ந்து  இரண்டாவது இன்னிங்சில் ஆடிய தென் ஆப்ரிக்க அணி, மூன்றாவது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து, இன்னிங்ஸ், 203 ரன்கள் வித்தியாசத்தில் பின் தங்கியிருந்தது. டி புருய்ன் (30), நார்ட்ஜே 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


இன்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது போட்டி துவங்கிய 9 வது நிமிடத்தில் தென் ஆப்ரிக்க அணி கூடுதலாக ஒரு ரன் மட்டும் எடுத்து, 133 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.  இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் 212 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார் மேலும் இந்த தொடரில் சிறப்பாக விறையாடி 529 ரன்கள் குவித்த அவர் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்தியா சார்பில் முகமது ஷமி 3, உமேஷ் யாதவ், நதீம் தலா 2, அஸ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம்  இந்திய அணி 240 புள்ளிகள் பெற்று, டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *