தேவர் ஜெயந்தி.. கோவையில் தேவர் சிலைக்கு அமைச்சர் S.P.வேலுமணி மாலை அணிவித்து மரியாதை..!
கோவை குறிச்சி மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெற்ற பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் 113-வது ஜெயந்தி விழாவில் பங்கேற்று, அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்துக்கு மலர் தூவியும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மரியாதை செலுத்தினார்.
கோவை, அக்-30

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது பிறந்த நாளான இன்று தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மதுரை கோரிப்பாளைத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், கோவை குறிச்சி மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெற்ற பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் 113-வது ஜெயந்தி விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார். அப்போது, தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்துக்கு மலர் தூவியும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மரியாதை செலுத்தினார்.
