மராட்டியம், அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் நிறைவு

அக்டோபர்-21

மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் களம் கண்டன. இதுதவிர ராஜ்தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளும் தேர்தலை சந்தித்தது.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் பா.ஜ.க. காங்கிரஸ், சவுதாலாவின் ஜனநாயக ஜனதாக் கட்சி ஆகியவை அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டனர். இதுதவிர, 18 மாநிலங்களில் 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மகராஷ்டிராவில் அரசியல் கட்சியினர், திரை மற்றும் விளையாட்டு பிரபலங்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கி ஒரு சில நேரங்களில் மந்தமாகவும், ஒரு சில நேரங்களில் விறுவிறுப்பாகவும் வாக்குப்பதிவானது நடைபெற்றது.

இறுதி நிலவரப்படி, மகராஷ்டிராவில் 288 சட்டப்பேரவை தொகுதிகளில் 55.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியாணாவில் 90 தொகுதிகளில் 62.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *