இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,648 பேருக்கு கொரோனா..!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.21 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 80.88 லட்சத்தை தாண்டியது.

டெல்லி, அக்-30

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இன்று காலை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,88,851 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 583 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,21,090 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73.73 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 57,386 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5.94 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.50 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 91.15 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *