அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..!

கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வு கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களை முந்தைய தேர்வில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

சென்னை, அக்-29

கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு, இறுதிப்பருவத்தேர்வு தவிர, மற்ற பருவத் தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுபோல, அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் தரப்பில் ‘இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு கவுன்சிலின் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம் எனக் கேள்வி எழுப்பிய நிலையில் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என யுஜிசி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேர்வுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை வைக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் யுஜிசி தகவல் தெரிவித்துள்ளது.

இறுதி பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டமாகக் கூறியுள்ளது. மேலும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இறுதி பருவத் தேர்வு நடத்த இயலாவிட்டால் கால அவகாசத்தை நீட்டிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளதோடு, இறுதிப் பருவத் தேர்வுகள் நடத்துவதை எதிர்த்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது. அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தில் யுஜிசி தாக்கல் செய்த பதில் மனுவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *