தமிழகத்தில் குறையத்தொடங்கும் கொரோனா பாதிப்பு..! இன்று மேலும் 2,516 பேருக்கு உறுதி..!!

சென்னை, அக்-28

  • தமிழகத்தில் இன்று மேலும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,16,751 ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,79,377 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 3,859 பேர் குணமடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 11,018 ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 688 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 197751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 97,32,863 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 72,433 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 201 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 26,356 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,32,620 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,508 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,84,099 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,008 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.
  • வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,711 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *