பாஜக மகளிரணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்..!!

தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் பா.ஜ.க.னதாவின் மகளிர் அணி தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, அக்-28

பா.ஜ.க.வின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா பொறுப்பேற்றதை தொடர்ந்து, மாற்றியமிக்கப்பட்ட தேசிய நிர்வாகிகளின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு எந்தவித பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. குறிப்பாக, தேசிய செயலாளராக இருந்து வந்த எச்.ராஜாவின் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால், தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இதற்கான உத்தரவை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பிறப்பித்துள்ளார்.

தற்போது, பாஜக மாநில துணைத் தலைவராக வானதி சீனிவாசன் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, தமிழக பாஜகவினர் வானதி சீனிவாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *