அதிமுகவில் புதிய மாற்றம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை..!
சென்னை, அக்-28

இது தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அதிமுகவின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டும், கழகப் பணிகளை விரைவுப்படுத்தும் வகையிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் வட சென்னை, தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் தென்னை தெற்கு ஆகிய மாவட்டங்கள் கீழ்க்கண்டவாறு புதிய மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டு பின்வருமாறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்பதையும், மாவட்டக் கழகச் செயலாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வடசென்னை தெற்கு (கிழக்கு)- (மாவட்ட கழக செயலாளர்) திரு. D. ஜெயக்குமார்
- ராயபுரம்(17)
- திரு.வி.க.நகர் (தனி) (15)
வடசென்னை தெற்கு(மேற்கு) (மாவட்ட கழக செயலாளர்) திரு.நா.பாலகங்கா
- எழும்பூர் (தனி) (16)
- துறைமுகம்(18)
தென் சென்னை வடக்கு(கிழக்கு) (மாவட்ட கழக செயலாளர்) திரு.ஆதிராஜாராம்
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி(19)
- ஆயிரம் விளக்கு(20)
தென் சென்னை வடக்கு(மேற்கு) (மாவட்ட கழக செயலாளர்) திரு.தி-நகர் B. சத்தியா, MLA
- தியாகராய நகர்(24)
- அண்ணாநகர்(21)
தென் சென்னை தெற்கு (கிழக்கு) (மாவட்ட கழக செயலாளர்) திரு.M.K.அசோக் Ex.MLA
- மைலாப்பூர்(25)
- வேளச்சேரி(26)
தென் சென்னை தெற்கு (மேற்கு) (மாவட்ட கழக செயலாளர்) திரு.வருகை V.N. ரவி, MLA
விருகம்பாக்கம்(22)
சைதாப்பேட்டை(23)
கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும், சம்மந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழகப் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை தற்போதுள்ள நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.