தமிழகத்தில் 2021ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை.. அரசாணை வெளியீடு..!!
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் பட்டியலில் குறிப்பிட்டுள்ள நாட்களில் அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2021ம் ஆண்டில் ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 25ம் தேதி வரை தொடர்ந்து 23 நாட்கள் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அக்-28

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆண்டின் இறுதி மாதங்களில் அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாள்களை அரசு வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் 2021-ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும். மேலும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


