கல்கி ஆசிரமம்: வருமானவரி சோதனையில் ரூ.800 கோடி கண்டுபிடிப்பு…

அக்டோபர்-21

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவுபெற்றுள்ள நிலையில், 800 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்யபாளையத்தில் அமைந்துள்ள கல்கி ஆசிரமத்தோடு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 நாட்களாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 44 கோடி ரூபாய், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், 90 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் காட்டப்படாத 4 ஆயிரம் ஏக்கர் நிலம், துபாய், ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் முதலீடுகள், ஹவாலா பரிமாற்றங்கள், பினாமி சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

800 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கி ஆசிரமம் தொடர்புடைய முக்கிய நபர்களான கிருஷ்ணாவும், பிரீத்தாவும் சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், ஆவணங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *