தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு..!

சென்னையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து, ரூ.38,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, அக்-27

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. சமீப காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து, ரூ.38,296 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 64 உயர்ந்து, ரூ.4,787 -க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயர்ந்து, ரூ.66.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ. 900 உயர்ந்து ரூ.66,700 ஆகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *