ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது, பிசிசிஐ..இளம் வீரர்களுக்கு வாய்ப்பு..!!

டெஸ்ட், ஒரு நாள் போட்டி, மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ அறிவித்துள்ள கிரிக்கெட் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த டி.நடராஜனும் இடம் பெற்றுள்ளார்.

மும்பை, அக்-26

இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.

டி20 அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. விராட் கோலி (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. மயங்க் அகர்வால், 4. கேஎல் ராகுல் (துணைக் கேப்டன்), 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. மணிஷ் பாண்டே, 6. சஞ்சு சாம்சன், 7. ஜடேஜா, 8. வாஷிங்டன் சுந்தர், 9. சாஹல், 10. பும்ரா, 11. முகமது சிராஜ், 12. நவ்தீப் சைனி, 13. தீபக் சாஹர், 14. வருண் சக்ரவர்த்தி.

ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. விராட் கோலி (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. ஷுப்மான் கில், 4. கேஎல் ராகுல் (துணைக்கேப்டன்), 5. ஷ்ரோயஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ஹர்திக் பாண்ட்யா, 8. மயங்க் அகர்வால், 9. ஜடேஜா, 10. சாஹல், 11. குல்தீப் யாதவ், 12. பும்ரா, 13. முகமது சிராஜ், 14. நவ்தீப் சைனி, 15. ஷர்துல் தாகூர்.

டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர்கள் விவரம்:-

  1. விராட் கோலி, 2. மயங்க் அகர்வால், 3. பிரித்வி ஷா, 4. கேஎல் ராகுல், 5. புஜாரா, 6. ரகானே, 7. ஹனுமா விஹாரி, 8. ஷுப்மான் ஹில், 9. சகா, 10. ரிஷப் பண்ட், 11. பும்ரா, 12. முகமது ஷமி, 13. உமேஷ் யாததவ், 14. நவ்தீவ் சைனி, 15. குல்தீப் யாதவ், 16. ஜடேஜா, 17. அஸ்வின், 18. முகமது சிராஜ்.

மேலும் கமலேஷ் நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் பொரெல் மற்றும் டி. நடராஜன் ஆகிய நான்கு கூடுதல் பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக இந்திய அணியுடன் பயணம் செய்வார்கள். ரோஹித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் காயமடைந்துள்ளதால் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரோஹித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரின் முன்னேற்றத்தை பிசிசிஐ மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *