மருத்துவப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

டெல்லி, அக்-26

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவை இந்த ஆண்டே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு மற்றும் அதிமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்திற்கு மட்டும் தற்போது தனிப்பட்ட முறையில் இடஒதுக்கீடு வழங்கினால் அது மற்ற மாநிலங்களில் சட்ட சிக்கல்களை உருவாக்கும். 50% இடஒதுக்கீடு அல்லது குறைந்த பட்ச ஒதுக்கீடு 27% இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது என மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வாதப் பிரதிவாதங்கள் முடிந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்த உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *