பொய்களை அள்ளி வீசும் மு.க.ஸ்டாலின்.. அமைச்சர் S.P.வேலுமணி விளாசல்..!!
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவது உறுதி என்ற பயத்தில், ஸ்டாலின் பொய்களை அள்ளி வீசி வருகிறார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
கோவை, அக்-26

கோவை அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த ஆயுத பூஜை விழாவில், பங்கேற்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயி என்று சொல்லும் தகுதி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. அவர் உண்மையான விவசாயி. ஸ்டாலின் போல், கரும்பு காட்டுக்குள், ‘கான்கிரீட்’ போட்டு அவர் நடந்து செல்வது இல்லை. விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் கொண்டு வந்துள்ளார். இன்று மேட்டூர் அணையில், 100 அடி தண்ணீர் உள்ளது. கரிகால் சோழன் காலத்தில் இருந்த குடிமராமத்து திட்டத்தை மீண்டும் கொண்டு வந்ததால், அனைத்து ஏரிகளிலும், குளங்களிலும் கூடுதலாக தண்ணீர் தேங்கியுள்ளது.வரும், 2021 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் இபி.எஸ்., என, எப்போது ஓ.பி.எஸ்., அறிவித்தாரோ, அன்றைக்கே ஸ்டாலின், ‘நமக்கு வேலை ஆகாது’ என்று முடிவு செய்துவிட்டார். அதனால்தான், பொய்களை அள்ளி வீசி வருகிறார்.
ஒட்டுமொத்த தமிழகமுமே பாராட்டும் அளவிற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் நலன் காக்க தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குடிமராமத்து பணிகளை அமல்படுத்தி தற்கால கரிகால சோழனாக மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.