தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,704க்கு விற்பனை!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,704க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, அக்-26

பொது முடக்க காலத்தில் தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த சில வாரமாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.4,713-க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,704க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.66.10க்கும் ஒரு கிலோ தங்கம் ரூ.66,100க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *