வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா?.. வெளியானது சூரரைப்போற்று ட்ரைலர்..!!
சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
சென்னை, அக்-26

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இது அவருடைய 38-வது படமாகும். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை – ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு – நிகேத் பொம்மிரெட்டி.
சூரரைப் போற்று படம் திட்டமிட்டபடி அக்டோபர் 30 அன்று வெளியாவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. விமானம் தொடர்பான கதை என்பதால் இந்திய விமானத்துறையிடமிருந்து அனுமதி வாங்கிய பிறகுதான் படத்தை ஓடிடியில் வெளியிடமுடியும். இதனால் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்படுவதாக சூர்யா தெரிவித்தார்.
தற்போது, சூரரைப் போற்று படத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இப்படம் தீபாவளிக்கு அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.