மராட்டியம், அரியானா சட்டமன்றத் தேர்தல்கள்: 3 மணி வரை நிலவரம்

அக்டோபர்-21

அரியானாவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 39.58 சதவீத வாக்குகளும், மராட்டியத்தில் 31.54 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தல்களுக்கு இன்று காலை முதல்  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிடுகின்றன. 90 உறுப்பினர்களை கொண்ட அரியானாவில், ஆளும் பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், மராட்டியம் மற்றும் அரியானாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணியளவில் தொடங்கியது.  இரு மாநிலத்திலும்   காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு  8.73 சதவீதம் மற்றும் 5.46 சதவீதமாக இருந்தது. 12 மணியளவில் வாக்குப்பதிவானது மராட்டியத்தில் 23.12 சதவீதம்  மற்றும் ஹரியானாவில் 16.28  சதவீதமாக இருந்தது. இந்த நிலையில், அரியானாவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 39.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. மராட்டியத்தில்  31.54 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *