சென்னையில் இடி மின்னலுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

சென்னை, அக்-22

மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை 3.30 மணி முதலே கனமழை பெய்து வருகிறது. கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்துவருகிறது.

சென்னையில் எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, வடபழனி, மெரினா, ராயப்பேட்டை, காசிமேடு, கோடம்பாக்கம், சூளைமேடு, ஐயப்பன்தாங்கல், வானகரம், சென்ட்ரல், திருவொற்றியூர், ராயபுரம், மெரினா, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அயனாவரம், அண்ணாசாலை, புதுப்பேட்டை, அய்யப்பன்தாங்கல், தேனாம்பேட்டை, தாம்பரம், பெருங்குளத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக சென்னையில் இருள்சுழந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே சாலையில் செல்கின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் சாலையில் நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளையும் கனமழை நீடிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *