தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!!
அக்டோபர்-21
தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் இந்திய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே வளிமண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி நிலவுவதன் காரணமாகவும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையை குறிக்கும் ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு குறியீட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தேனி திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை அன்று மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 4 மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 21 செண்டி மீட்டருக்கு மேல் மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.