ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற இளம் மருத்துவர் பலி..!!

பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார்.

ரியோ டி ஜெனிரோ, அக்-22

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தடுப்பூசி போடப்பட்ட தன்னார்வலர் ஒருவர் இறந்துவிட்டதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்த 28 வயதான டாக்டர் ஜோனோ ஃபீடோசா என்ற தன்னார்வலர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை. தன்னார்வலர் இறந்தாலும் தடுப்பூசி சோதனை தொடரும் என பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *