அமித்ஷாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் S.P.வேலுமணி உள்ளிட்டோர் வாழ்த்து..!

சென்னை, அக்-22

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பிறந்தநாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், முதல்வர் பழனிசாமி அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்துடன் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், நாட்டிற்கே சேவை செய்யும் தங்களுக்கு வல்லமையை வழங்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடன் அமித்ஷா நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதே போல தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி. உங்களுக்கு இறைவன் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் பல ஆண்டுகளாக தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட சேவைக்காக பிரார்த்தனை செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *