நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

வரும் நவம்பர் 2ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

அமராவதி, அக்-21

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த மாதம் முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது. எனினும், மாநிலங்கள் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆந்திராவில் பள்ளிகள் திறப்பது குறித்து மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, அவர் கூறுகையில், “1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ.,2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். 1,3,5 மற்றும 7 வகுப்புகளுக்கு ஒரு நாளும், 2,4,6,8ம் வகுப்புகளுக்கு மற்றொரு நாளும் என 2 நாட்களுக்கு ஒருமுறை பள்ளிகள் திறக்கப்படும். ஒருவேளை மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின், 3 நாட்களுக்கு ஒருமுறை வகுப்புகள் திறக்கப்படும். அதுவும் பள்ளிகள் மதியம் வரை மட்டுமே செயல்படும். மதிய உணவிற்கு பிறகு, மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள், இந்த நடைமுறை அடுத்த மாதம் செயல்படுத்தப்படும். பின்னர், டிசம்பர் மாத்தில் சூழ்நிலைக்கு ஏற்றார் போல பள்ளிகள் செயல்படுவது அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *