சென்னையில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் விற்பனை

சென்னையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45க்கு விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக இன்று சென்னையிலும், நாளை முதல் தமிழகம் முழுவதும் விற்பனையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, அக்-21

சமையலின் முக்கிய ஆதாரமாக திகழும் பெரிய வெங்காயத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து உள்ளது. இந்த விலையேற்றமானது மக்களை விழி பிதுங்கச் செய்துள்ளது.

இந்நிலையில் பெரிய வெங்காயத்தை பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.45க்கு விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் விற்பனை இன்று தொடங்கியது. சென்னை தேனாம்பேட்டை கடையில் ரூ.45க்கு பெரிய வெங்காயம் விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

பெரிய வெங்காயம் விலை ரூ.100ஐ தாண்டியதால் மக்கள் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் 150 டன் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *