காவலர் நினைவு கல்வெட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்..!
வீரமரணம் அடைந்த காவலர்கள் 151 பேரின் உருவம் பொறித்த கல்வெட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை, அக்-20

நாளை(அக்டோபர் 21 ஆம் தேதி) காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, 1962 முதல் பல்வேறு சம்பவங்களில் வீரமரணம் அடைந்த 151 காவலர்களின் உருவம் பொறித்த கல்வெட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்டினை திறந்து வைத்து வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், ஜிபி திரிபாதி, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட காவல் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.