மீண்டும் நடிக்கும் சவுகார் ஜானகி!!!
சென்னை, அக்டோபர்-21
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைப்படத்தில் மீண்டும் நடிக்கிறார்.
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார். ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். முழு நீள நகைச்சுவை படமாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் சவுகார் ஜானகி நடிப்பது குறித்து இயக்குனர் ஆர்.கண்ணன் கூறியதாவது: சந்தானத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சவுகார் ஜானகியை முதலில் அழைத்தபோது நடிப்பதை நிறுத்தி விட்டேன் என்றார். பிறகு கதையை கேட்டவுடன் பிடித்துபோய் உடனே நடிக்க சம்மதித்தார். இது அவருக்கு 400-வது படம் என்றும் கூறினார். தில்லு முல்லு படத்தை போன்று நகைச்சுவை கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். சந்தானம், சவுகார் ஜானகியின் நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும். இவ்வாறு இயக்குனர் கண்ணன் கூறினார்.