நாட்டு மக்களிடையே இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
டெல்லி, அக்-20

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு உரையாற்ற உள்ளார். இன்று மாலை 6 மணிக்கு ஒரு தகவலுடன் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அனைவரும் நிச்சயம் இணைந்திருங்கள் என்று ஹிந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா பரவல் மெல்ல குறைந்து வரும் நிலையில், கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, தற்போது பல்வேறு கட்ட தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
தற்போது பருவமழை மற்றும் தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. ஊரடங்கு தளர்வு மற்றும் பண்டிகைகாலம் போன்றவற்றால் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை பரவலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. பண்டிகைக்காலம் நெருங்குவதால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய உரையில் பிரதமர் மோடி வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.