தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.37,360-க்கு விற்பனை..!!

சென்னையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 312 குறைந்து ரூ. 37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, அக்-20

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறியீடு சரிவு உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்து, தற்போது ஏற்ற, இறக்க நிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.1,464 குறைந்து, ரூ.37,440-க்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ. 312 குறைந்து ரூ. 37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 39 குறைந்து ரூ. 4,670-க்கு விற்பனை ஆகிறது.

அதேபோன்று மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து இன்று ரூ. 66.10 -க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.66,100-க்கும் விற்பனை ஆகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *