இந்தியாவில் ஒரே நாளில் 46,790 பேருக்கு கொரோனா..587 பேர் பலி..!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.15 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 75.97 லட்சத்தை தாண்டியது.

டெல்லி, அக்-20

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 46 ஆயிரத்து 791 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 75 லட்சத்து 97 ஆயிரத்து 64 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 7 லட்சத்து 48 ஆயிரத்து 538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 69 ஆயிரத்து 721 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 67 லட்சத்து 33 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 587 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 197 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *