35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் “அன்பு”… மகனுக்காக உருகிய மா.சுப்ரமணியன்..!
சென்னை, அக்-19

முன்னாள் மேயரும், திமுக மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியனின் இளையமகன் சு.அன்பழகன் (34) கொரோனா பாதிப்பால் சனிக்கிழமை காலமானாா். அன்பழகன் பிறவியில் இருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்டவா்ஆவாா். பெற்றோா்களின் அரவணைப்பிலேயே இருந்து வந்தாா். கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சை பெற்றாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலமானாா்.
மகனின் மறைவால் மன வருத்தத்தில் இருக்கும் மா. சுப்ரமணியன், தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதோடு, கடந்த 35 ஆண்டுகளாக என் களைப்பை போக்கிய அருமருந்து என் “அன்பு”.. என்றும் தனது துக்கத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.


