செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவுகிறதா?.. மத்திய அமைச்சர் விளக்கம்
கொரோனா காலத்தில் செய்தித்தாள்கள் படிப்பது முற்றிலும் பாதுகாப்பானதுதான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லி, அக்-19

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் சமூக வலைத்தளம் வாயிலாக மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது செய்தித்தாள் மூலம் கொரோனா பரவுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஹர்ஷவர்தன், செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், இந்த கொரோனா காலத்தில் செய்தித்தாள்கள் படிப்பது முற்றிலும் பாதுகாப்பானதுதான் என்றும் கூறினார்.