162 ரன்னில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!!!
ராஞ்சி, அக்டோபர்-21
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களில் சுருண்டது.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்திருந்த போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அணித் தலைவர் விராட் கோலி அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசினார். ரகானே சதம் அடித்தார்.

பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது நாள் ஆட்டத்திலும் அந்த அணி தடுமாறியது. இறுதியில் அந்த அணி 162 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், முகமது சமி, நதீம், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.