இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்தது..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 66.63 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லி, அக்-19

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75,50,273 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 55,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 579 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,14,610 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66,63,608 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 66399 பேர் குணமடைந்துள்ளனர். புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,72,055 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குணமடைந்தோர் விகிதம் 88.26% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.52% ஆக குறைந்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் விகிதம் 10.23% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 8,59,786 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 9,50,83,976 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *