வசந்த்குமார் மீது வழக்குப் பதிவு
நாங்குனேரி.அக்டோபர்.21
நாங்குனேரியில் தேர்தல்விதி முறையை மீறி வாக்குச்சாவடியில் நுழைந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவரும் மக்களைவை உறுப்பினருமான வசந்த்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் அதிமுக சார்பில் நாராயணனும் போட்டியிடுகின்றனர். இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவரும் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினருமான வசந்த்குமார் இன்று காலை முதல் நாங்குனேரி தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து தேர்தல் அதிகாரி ஜான்கேப்ரியல் கொடுத்த புகாரின் பேரில் களக்காடு பகுதியில் வசந்த்குமாரின் வாகனத்தை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவரை நாங்குனேரி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக வசந்த்குமார் மீது 171 H .130.143 ஆகிய மூன்று பிரவுகளின் கீழ் காவ்லதுறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். .

இது குறித்து வசந்த்குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எம்,பி என்றும் பாராமல் பாளையங்கோட்டையில் உள்ள எனது வீட்டிற்கு சென்றபோது காவல் முறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளதாக கூறியுள்ளார்.