இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,14,031 ஆக உயர்வு..!

டெல்லி, அக்-18

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. அந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தை நெருங்கி உள்ளது. மொத்த பாதிப்பு 74,94,552 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 61,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1033 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,14,031 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65,97,210 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 72614 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றும் புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,83,311 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.52 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 88.03 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *