எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் ஓட்டு-பிஜேபி எம்.எல்.ஏ. பரபரப்பு வீடியோ
புதுடெல்லி, அக்டோபர்-21
ஹரியாணாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக எம்எல்ஏ பக்ஷி சிங் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஹரியாணா தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக எம்எல்ஏ பக்ஷி சிங் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, அதில், ‘பாஜகவில் இவர் தான் நேர்மையான மனிதர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அசந்த் தொகுதி தற்போதைய எம்எல்வான பக்ஷி சிங், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் தங்களால் தெரிந்து கொள்ள முடியும் எனவும், எந்த பட்டனை அழுத்தினாலும் அந்த வாக்கு பாஜகவுக்கு விழும்படி செய்துள்ளதாகவும் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.