வரலாற்றை படைப்போம், வாகை சூடுவோம்.. சூளுரைத்த ஓ.பி.எஸ்..!
அதிமுக பொன்விழா ஆண்டிலும் அம்மாவின் அரசாட்சியே தொடர்ந்தது என்ற வரலாற்றை படைப்போம், வாகை சூடுவோம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை, அக்-17

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக கொடியை துணை முதலமைச்சரும் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஏற்றி வைத்தார். பின்னர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், ‘’அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக பொன்விழா ஆண்டிலும் அம்மாவின் அரசாட்சியே தொடர்ந்தது என்ற வரலாற்றை படைப்போம், வாகை சூடுவோம்.’’எனக் கூறினார்.
தன் தாயார் மறைவையொட்டி, முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் இருப்பதால் இந்நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவில்லை.