நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. அகில இந்திய அளவில் ஒடிசா மாணவர் முதலிடம் பிடித்தார்..!!

எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் தோ்வு முடிவுகள் www.ntanneet.nic.in என்ற இணையதளத்தில் தேசிய தோ்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி, அக்-16

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. இதில், தமிழகத்தில் ஒரு லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். மேலும், கொரோனா தொற்றுக்கு ஆளான மாணவர்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்ததால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு நேற்று முன்தினம் மறு தேர்வு நடத்தப்பட்டது.

சென்னையில் இரண்டு மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 188 பேர் மறு தேர்வு எழுதினர். மேலும், கடந்த 12-ம் தேதியே நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மறு தேர்வு நடத்தப்பட்டது.

இதையடுத்து, தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.. தேர்வு முடிவுகளை www.ntaneet.ac.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சோயப் அப்தாப் என்பவர் 99.99 சதவிகித மதிப்பெண்களுடன் நாட்டிலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *