வீரபாண்டிய கட்டபொம்மன், பா.ராமச்சந்திர ஆதித்தனாருக்கு அமைச்சர் S.P.வேலுமணி நினைவஞ்சலி!
சென்னை, அக்-16

நெஞ்சு நிமிர்த்தி வீரத்தோடு வெள்ளையர்களோடு போரிட்டதால் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த புதல்வரும், மாலை முரசு பத்திரிக்கை அதிபருமான பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவு தினம். இன்றைய நாளில் அவர்கள் இருவருக்கும் தனது நினைவஞ்சலியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், “‘தானம் வேண்டுமானாலும் தருவேன். தருமம் வேண்டுமானாலும் தருவேன். வானம் இடிந்து விழுந்தாலும் வரி கொடுக்க மாட்டேன்.’ என ஆங்கிலேயர்களுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி முழங்கிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களது நினைவு தினத்தில் அவரை நினைவுகூர்வதில் பெருமை கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், “தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் மூத்த புதல்வரும், மாலை முரசு பத்திரிகை அதிபருமான திரு. பா. ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளில் அவரது அளவற்ற தமிழ் பற்றையும், பத்திரிகை துறை வழியாக அவர் ஆற்றிய சேவையையும் நினைவு கூர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.