பிரதமர் மோடியின் சொத்து விவரம் இதுதான்..! தெரிஞ்சா அதிர்ச்சி ஆகிடுவீங்க..!!

டெல்லி, அக்-15

பிரதமர் நரேந்திர மோடியின் அசையும் சொத்துகள் கடந்த 15 மாதங்களில் 36.53 லட்சம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அவர் தனது மாத வருவாயில் பெரும் பகுதியை சேமித்து வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியில் போட்டு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தாமாக முன் வந்து தமது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, அவரது அசையும் சொத்துக்களின் மதிப்பு கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 1,39,10,260-ல் இருந்து ரூ.1,75,63,618 ஆக அதாவது 26.26 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி நிலவரப்படி தனது சொத்து மதிப்புகள் குறித்து அக்டோபர் 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தாமாக முன்வந்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், பிரதமர் நரேந்திர மோடியின் அசையும் சொத்துகள் மதிப்பு உயர்ந்திருப்பதில், முக்கியக் காரணியாக அவரது மாத வருவாயில் பெரும்பகுதி சேமிப்பாக மாற்றப்பட்டுள்ளதே என்று கருதப்படுகிறது.
அதே வேளையில், அசையா சொத்துகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏற்கனவே, அவர் தனக்கும் தனது குடும்பத்துக்கும் சொந்தமாக ரூ.1.1 கோடி மதிப்பிலான நிலம் மற்றும் வீடு இருப்பதாகக் கூறியிருந்தார்.

70 வயதாகும் பிரதமர் நரேந்திர மோடி, வரிச் சலுகை பெறும் ஆயுள் காப்பீடு, தேசிய சேமிப்புப் பத்திரம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். மாதம் தலா இரண்டு லட்சம் ஊதியமாக பெறும் பிரதமர் மோடியின் வங்கிக் கணக்கில் ரூ.3.38 லட்சம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2019 மார்ச் 31-ம் தேதி ரூ.4,143 ஆக இருந்துள்ளது.

கடந்த ஆண்டு அவருடைய காந்திநகர், ஸ்டேட்பேங்க் கிளையில் உள்ள நிலைத்த வைப்பு தொகை ரூ. 1,27.81,574 ஆக இருந்தது. தற்போது அந்த மதிப்பு ரூ. 1,60, 28,039-ஆக உயர்ந்துள்ளது.45 கிராம் எடையுள்ள 4 தங்க மோதிரங்களை வைத்திருக்கிறார் மோடி. அதன் மதிப்பு தற்போது ரூ. 1,51, 875 ஆகும். காந்தி நகரில் இருக்கும் வீடு மற்றும் அதனை சுற்றி இருக்கும் நிலத்தின் மதிப்பு ரூ. 1.1 கோடியாக உள்ளது. இந்த அசையா சொத்தின் நான்கு உரிமையாளர்களில் ஒருவராக மோடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடன் ஏதுமற்றவராக மோடி இருக்கிறார். அவரிடம் காரும், இருசக்கர மோட்டர் வாகனம் என்று ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *