கஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடு வழங்கினார் ரஜினி!!!
சென்னை, அக்டோபர்-21
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடுமபத்தினருக்கு மொத்தம் 18 லட்சம் செலவில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை பயனாளர்களுக்கு ரஜினி வழங்கினார்.
தமிழகத்தை கடந்த ஆண்டு கஜா புயல் தாக்கியது. இதில் டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாக்கின. மக்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர், புயல் தாக்கியபோது நிவாரணப் பொருட்கள் வழங்கினர். சிலர் வீடுகள் கட்டி தரும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டனர்.

அந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்த் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேருக்கு தலா ஒரு லட்சத்தில், வீடுக் கட்டி தருவதாக உறுதி அளித்திருந்தார். 6 மாதக் காலமாக நடந்து வந்த கட்டடப் பணிகள் சில நாட்களுக்குமுன் முடிவடைந்தது. இந்நிலையில்,
சென்னை போயஸ் கார்டனுக்கு நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரையும் வரவழைத்து கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் சாவியைச் ரஜினி ஒப்படைத்தார்.
