சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம், அக்-15

கேரள மாநிலத்தில் உள்ள மிகவும் பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கும் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. சபரிமலை கோவில் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், கோவிலில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று வெளியிட்டார். இது தொடர்பாக பினராயி விஜயன் கூறுகையில், நாளை திறக்கப்பட உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வேண்டும். ஒரு நாளைக்கு 250 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல்நிலை மலையேற தகுதியுடன் தான் உள்ளது என உடல்நல தகுதிச்சான்றிதழும் கட்டாயம் வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *