மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிமுகவுக்கு கட்டாயம் இடம் இருக்கும்.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிமுகவிற்கான இடத்தை கட்டாயம் எதிர்பார்க்கிறோம். அதற்கான முழு தகுதியுடைய கட்சி அதிமுக எனறு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

சென்னை, அக்-15

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியிலுள்ள தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொழுகையில் பங்கேற்றார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- “மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிமுகவிற்கான இடத்தை கட்டாயம் எதிர்பார்க்கிறோம். அதற்கான முழு தகுதியுடைய கட்சி அதிமுக. மத்திய அமைச்சரவையில் இடம் பெறத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக மேற்கொள்ளும். இருப்பினும் இது ஒரு அதிமுக தொண்டனாக என் கருத்தே தவிர தலைமையின் அதிகாரப்பூர்வமான கருத்தல்ல என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *