ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள்.. S.P.வேலுமணி தொடங்கிவைத்தார்

கோவை, அக்-15

அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கிராம ஊராட்சிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடி ,அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில்,நீர்மேலாண்மையை பெண்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். என்று வலியுறுத்தியிருந்தார்.

இத்திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் ஊராட்சி பகுதிகளில் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில் இப்பணிகள் உள்ளளாட்சித்துறை மூலம் செயல்படுத்தப்டுகிறது.

இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள ஊரகப்பகுதிகளில் தமிழக ஊள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு பணிகளை தொடங்கி வைத்தார். குறிப்பாக கோவை மாவ்ட்டம் இக்கரைபோளுவம்பட்டி ஊராட்சி, செம்மேடு, முட்டத்துவயல், கோட்டைக்காடு,காராமத்தூர் ஆகிய கிராமங்களில் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகளை தொடங்கிவைத்து, திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *